உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!


தெலுங்கில் ஏற்கனவே ‛சார்' என்ற படத்தில் நடித்தார் தனுஷ். அந்த படம் தமிழில் ‛வாத்தி' என்ற பெயரில் வெளியானது. அதையடுத்து தற்போது சேகர் கம்முலா இயக்கி உள்ள ‛குபேரா' படத்தில் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த குபேராவில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ‛போய் வா நண்பா' என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. தனுஷ் பின்னணி பாடியுள்ள இந்த பாடலை விவேகா எழுதி உள்ளார். இப்படம் ஜூன் 20ல் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !