உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்!

சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்!


1992ல் மணிரத்னம் இயக்கிய ‛ரோஜா' படத்தில் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், அதன்பிறகு மணிரத்னம் இயக்கி உள்ள ‛தக்லைப்' படம் வரை அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வந்துள்ளார். அந்த வகையில் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 19 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இந்த நிலையில் தற்போது ‛தக்லைப்' படத்தில் கமல் எழுதியுள்ள ‛ஜிங்குச்சா' பாடலின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நேரத்தில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் புதிதாக வாங்கியுள்ள சிவப்பு நிற காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மகேந்திரா எக்ஸ் இவி 9இ என்ற அந்த காரின் விலை 20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !