மேலும் செய்திகள்
மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர்
150 days ago
புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக்
150 days ago
ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ்
150 days ago
மலையாள திரை உலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் அறிமுகமாகி புருவ அழகி என பெயர் பெற்றவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு பிரேக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியா வாரியர். அது மட்டுமல்ல படத்தில் ஏற்கனவே ஹிட் ஆன சிம்ரனின் ஒரு பாடலுக்கும் அவரைப் போலவே நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு இன்னும் பெரிய அளவில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழா நிகழ்வு ஒன்றில் பிரியா வாரியர் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் ஒரு வீடியோவை திரையிட செய்து அதை பிரியா வாரியரை பார்க்கச் செய்தார். அந்த வீடியோவில் தோன்றிய நடிகர் விஜய், பிரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பையும் நடனத்தையும் பாராட்டியதுடன் இதேபோல இன்னொரு நடனத்தை ஆடுமாறும் கேட்டுக் கொண்டார். விஜய் இப்படி தன்னை பாராட்டுவதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பிரியா வாரியர் நான் பார்ப்பது நிஜம் தானா, எங்கே இன்னொரு முறை இந்த வீடியோவை பிளே செய்யுங்கள் என்று ஆர்வமுடன் கேட்டுள்ளார்.
உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று கூற, இதனால் அதிர்ச்சியான பிரியா வாரியர் உடனே டென்ஷனாகி, “இது ரொம்பவே டூ மச்.. உண்மையிலேயே இது தப்பான விஷயம்” என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இப்படி பிராங்க் என்கிற பெயரில் அதுவும் ஒரு வளர்ந்து வரும் நடிகையை ஏமாற்றும் விதமாக இப்படியா செய்வது என்று பிரியா வாரியருக்கு ஆதரவாகவும் நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
150 days ago
150 days ago
150 days ago