ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா
ADDED : 156 days ago
நயன்தாரா நடித்த டெஸ்ட் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டா தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நயன்தாரா, தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோ, புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது தனது மகன்கள், வானத்தில் தோன்றிய வானவில்லை பார்த்து ரசித்தபடி கண்டுபிடிச்சிட்டேன் ஐ ரெயின்போ என்று சொல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது மகன்கள் ரசிக்கும் முதல் வானவில் என்பதால் சின்ன சின்ன விஷயங்கள் தான், எப்பவும்... மகிழ்ச்சி என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.