உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' இயக்குனர் விண்வெளியிலா இருக்கிறார்?: சனம் ஷெட்டி கோபம்

'ஜனநாயகன்' இயக்குனர் விண்வெளியிலா இருக்கிறார்?: சனம் ஷெட்டி கோபம்

'அம்புலி 'படத்தின் மூலம் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அதன்பிறகு கதம் கதம், தகடு, சதுரம்-2, வால்டர், ஊமை செந்நாய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று பரபரப்பு புகார் கூறினார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் சனம் ஷெட்டி தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறார். இந்த நிலையில் தான் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்ததாகவும், தனக்கு எந்த பதிலும் கூறாமல் அலைக்கழித்ததாகவும், தான் ஒரு மார்க்கெட் இல்லாத நடிகை என்பதால் தன்னை இப்படி நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: 'ஜனநாயகன்' படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதால், அதில் நடிக்க ஒரு 6 மாத காலமாக அப்படத்தின் உதவி இயக்குனர் மூலமாக முயற்சி செய்துகொண்டு வருகிறேன். ஆனால் என்னை அலைய வைத்துள்ளார்கள். முடியாது என்று சொல்ல இத்தனை மாதம் ஆகிறதா? படத்தின் டைரக்டர் என்ன விண்வெளியிலா இருக்கிறார்?

நான் சினிமாவில் 15 வருடமாக இருக்கிறேன். ஹீரோயினாகவும் நடித்துள்ளேன். மார்க்கெட் உள்ள நடிகைகளுக்கு வாய்ப்பு தருகிறார்கள். மார்க்கெட் இல்லாத நடிகைகளை அலைக்கழிக்கிறார்கள். இந்த பாரபட்சம் தான் எனக்கு பிடிக்கவில்லை. விஜய்யின் கவனத்திற்கு கொண்டு வரவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்'' என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !