உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம்

எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ரெமோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் அன்சன் பால். தமிழில் 90 எம்எல், தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது திருமணம் திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.

மிகப்பெரிய அளவில் திரையுலக பிரபலங்கள் என யாரையும் அழைக்காமல் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருவனந்தபுரம் பத்திர பதிவு அலுவலகத்தில் இவருக்கும், திருவல்லாவை சேர்ந்த நிததி ஆன் என்கிற பெண்ணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த பதிவு திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் இப்படி இவர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தியதற்காக பாராட்டுகளையும் தம்பதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !