ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை
ADDED : 142 days ago
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லஷ்மி, சுவாசிகா ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளியான படம் 'மாமன்' . இந்த படத்தின் வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சூரி பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசியதாவது, மாமன் படம் வெற்றியடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்”. என சூரி வேதனைப்பட்டு பேசினார்.