'தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ!
ADDED : 469 days ago
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'தலைவன் தலைவி'. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.