பரபரப்பை ஏற்படுத்திய ரவி மோகன் - கெனிஷா புகைபிடிக்கும் வீடியோ
ADDED : 49 minutes ago
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற விண்ணப்பித்து தனியே வசித்து வருகிறார். இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் நட்பு ரீதியாக பழகி வந்தார். தற்சமயம் இருவரும் பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம் ரவி மோகன் படம் ஒன்றுக்கு கெனிஷா இசையமைக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் சிகரெட் புகைக்கும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதை ஏஐ (AI) வீடியோ என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாத அளவிற்கு பார்ப்பதற்கு ஒரிஜினல் வீடியோ போலவே தெரிகிறது.