தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்!
ADDED : 140 days ago
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த '96' என்ற படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். அதன் பிறகு, 'மாஸ்டர், கர்ணன், அடியே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சில வெப்சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கிளாமர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவுரி கிஷன், தற்போது தான் தாய்லாந்து நாட்டிற்கு தனது தோழிகள் படைசூழ இன்ப சுற்றுலா சென்ற வீடியோ புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் அங்குள்ள பீச்சில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட வீடியோ, படகில் ஜாலியாக பயணிக்கும் வீடியோ புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்.