உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர்

பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர்

1960களில் தமிழ் சினிமாவிலும், நாடக உலகிலும் சமூக கதைகள் வரத் தொடங்கி விட்டது. ஆனால் கன்னட சினிமாவிலும், நாடகத்திலும் புராண கதையே அதிக இடம் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில்தான் கிரிஷ் கர்னாட், கன்னட நாடக துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். இத்தனைக்கும் அவர் கன்னடர் அல்ல. மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர்.

கர்நாடக பல்கலைகழத்தில் படித்தபோது கன்னட கலாச்சாரம் பிடித்து விடவே அங்கேயே தங்கி விட்டார். பின்னர், லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழத்தில் முதுகலை படித்தாலும் கலைமீதுதான் ஆர்வம்.

தனது 23வது வயதில் 'யயாதி' என்ற நாடகத்தை அரங்கேற்றினார், இது மகாபாரத கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்ட சமூக கதை. நாடகத்திற்கு பிறகு குறும்படங்கள், சுயாதீன படங்களில் பணியாற்றியவர் பின்னர் சினிமாவிற்கு வந்தார்.

நாடகத்தை கைவிடாமல் இருக்க மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற நாடக அமைப்பு தொடங்கி அதன் மூலம் நாடகங்களை நடத்தி வந்தார். வெறும் கலைஞராக மட்டுமில்லாமல் சமூகத்திற்காக பல போராட்டங்களையும் முன்னெடுத்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றார். பல பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

தமிழில் நான் அடிமை இல்லை, குணா, காதலன், ரட்சகன், காதல் மன்னன், ஹேராம், செல்லமே, அமிர்தம், 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவரது 6வது நினைவு தினம் இன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !