மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
112 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
112 days ago
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அதையடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 46வது படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் கம்போசிங் பணிகளை தொடங்கி விட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''என்னை பொருத்தவரை ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். அப்படித்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் நடித்ததோடு இசையும் அமைத்தேன். அதன் பிறகு 'மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி' என மூன்று படங்களுக்கு இசையமைத்தேன். அந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றன. அதேபோல்தான் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி, லக்கி பாஸ்கர்' போன்ற படங்களுக்கும் இசையமைத்தேன். இப்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படத்திற்கும் இசையமைக்கிறேன்.
இந்த படமும் முந்திய இரண்டு படங்களை போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கான ஒரு பாடலை தற்போது கம்போஸ் செய்து முடித்து விட்டேன். அந்த பாடல் பயங்கரமா வந்திருக்கு. கண்டிப்பாக இந்த பாடல் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்'' என்று கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
112 days ago
112 days ago