பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம்
ADDED : 127 days ago
பிரபு சினிமாவில் அறிமுகமான ஆரம்பகால கட்டத்தில் சிவாஜியும், பிரபுவும் பல படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்கிற சென்டிமெண்ட் இருந்ததால் தயாரிப்பாளர்களும் இந்த காமினேஷனை மிகவும் விரும்பினார்கள்.
ஆனால் இருவரும் இணைந்து நடித்த சில படங்கள் தோல்வியும் அடைந்திருக்கிறது. அவற்றில் ஒன்று 'தராசு'. ராஜகணபதி என்பவர் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி, பிரபுவுடன் அம்பிகா, கே.ஆர்.விஜயா, நம்பியார், கல்லாப்பெட்டி சிங்காரம், பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது. படத்தின் ஒரே சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் சிவாஜி, பிரபு இருவருமே இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்.