மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
106 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
106 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
106 days ago
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'தக் லைப்' படம் ஜுன் 5ம் தேதி வெளியானது. கமல்ஹாசன் பேசிய கன்னட மொழி சர்ச்சையால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அங்கு படத்தை வெளியிட அரசு ஒத்துழைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, படத்தின் கர்நாடகா உரிமையை வாங்கிய வினியோகஸ்தர் வெங்கடேஷ் கமலகர் படத்தை வெளியிடுவதிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கன்னட மொழி பற்றியும், கன்னடர்களின் சென்டிமென்ட்டை புண்படுத்தும் விதமாக அமைந்த கமல்ஹாசன் பேச்சால் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. இப்போது படத்தை வெளியிடுவது சரியான வியாபாரமாகவும் இருக்காது. அவரது முந்தைய படமான 'இந்தியன் 2' படம் கர்நாடகாவில் சரியாக ஓடவில்லை.
'விக்ரம்' படம் நன்றாக ஓடியது. படம் எப்படியிருக்கிறது என்பது தெரியாமல் ஓடிப் போய் படம் பார்க்கும் கமல் ரசிகர்கள் இங்கு இல்லை. படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அவரது படங்களின் வெற்றி அமையும். 'தக் லைப்' படம் நன்றாக இல்லை என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. அதனால், அதை வெளியிடுவது 'ரிஸ்க்' ஆனது. இது எங்களது தவறு அல்ல, லாபம் வருமா என்ற சந்தேகம் உள்ள நிலையில் தியேட்டர்காரர்களும் படத்தைத் திரையிடத் தயங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டதால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் பங்கு சதவீதத்தை மிகவும் குறைத்துக் கேட்கிறார்களாம். எனவே, தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வெங்கடேஷ் திருப்பிக் கேட்பதாகவும், தனக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட்டு படத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கட்டும் என்றும் சொல்லியிருப்பதாகத் தகவல்.
உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்தந்த ஊர்களில் உள்ள தியேட்டர்களைத் தொடர்பு கொண்டு கன்னட அமைப்புகள் படத்தை வெளியிட விருப்பமில்லை என்று சொல்ல வேண்டும் என அன்பான மிரட்டல் விடுப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
106 days ago
106 days ago
106 days ago