மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
95 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
95 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
95 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
95 days ago
பாலிவுட்டில் தற்போதும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். தற்போதும் முன்னணி நடிகர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் இவர் 59 வயதான நிலையிலும் தனது உடலை தொடர்ந்து கட்டுகோப்பாக பராமரித்து வருகிறார். இவரது தந்தை சலீம்கானுக்கு வயது 89. அவரும் இந்த வயதில் திடகாத்திரமாக ஆரோக்கியமாக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சல்மான்கான் தங்கள் இருவரின் உடல்நிலை மற்றும் ஆரோக்கிய ரகசியம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “என் தந்தை இப்போதும் பரோட்டா சாப்பிடுகிறார். புல் மீல்ஸ் சாப்பிடுவதுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பதார்த்தங்களையும் சாப்பிடுகிறார். அவரது மெட்டபாலிசம் வேறு. அவர் வேறு மாதிரியான ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார். ஆனால் நானோ ஒரு ஸ்பூன் அளவு சாதம், காய்கறிகள், கொஞ்சம் புரோட்டின் சத்து கொண்ட சிக்கன், மட்டன் அல்லது மீன் இவை தான் சாப்பிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை எதிலும் அளவாக இருப்பது ஆரோக்கியத்தையும் உடல் கட்டுக்கோப்பையும் பராமரிப்பதில் முக்கியத்துவம் வகிக்கிறது” என்று கூறியுள்ளார்.
95 days ago
95 days ago
95 days ago
95 days ago