‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 137 days ago
'இரவுக்கு ஆயிரம் கண்கள்','கண்ணை நம்பாதே' போன்ற படங்களை இயக்கியவர் மு.மாறன். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து 'பிளாக்மெயில்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். பிந்து மாதவி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கிரைம் கலந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று கடந்த சில மாதங்களாக சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.