மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
94 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
94 days ago
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் 1975ம் ஆண்டு வெளிவந்த படம் 'இதயக்கனி'. அவருடன் ராதா சலுஜா, வி.கோபாலகிருஷ்ணன், எஸ்வி ராமதாஸ், வெண்ணிறாடை நிர்மலா, ராஜ சுலோச்சனா பண்டரிபாய் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ ஜெகநாதன் இயக்கிய இந்த படத்தை சத்யா மூவி சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்திருந்தார். எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
மிகப்பெரிய எஸ்டேட் தொழிலதிபரான எம்ஜிஆர் தனது எஸ்டேட்டில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகிறார். ஒரு ஏழைப் பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு விஞ்ஞானி கொலையில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைக்கிறது. போலீஸ் அதிகாரியான எம்ஜிஆர் அதனை கண்டுபிடித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது படத்தின் கதை.
தற்போது இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. வருகிற 4-ம் தேதி வெளி வருகிறது. இதனை பிவிஆர் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
94 days ago
94 days ago