மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
94 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
94 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
94 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
94 days ago
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மானின் வேபேரர் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'காந்தா'. இதில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகும் இதை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இதற்கு முன்பு இவர் ‛ஹன்ட் ஆப் வீரப்பன்' என்ற வெப் தொடரின் கதையாசிரியராக பணியாற்றி உள்ளார்.
இந்த படத்தை முதலில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் தற்போது செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியானது. இப்போது மீண்டும் இவர்களது படங்கள் மோதும் சூழல் உருவாகி உள்ளது.
94 days ago
94 days ago
94 days ago
94 days ago