இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது
ADDED : 94 days ago
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார் . 'டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் பின்னனி இசை பணியை மேற்கொண்டு வந்தார். அதில் முதல் பாகத்திற்கான பணி முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று முதல் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை தனுஷ் மேற்கொள்கிறார். அடுத்து 15 நாட்களுக்கு இட்லி கடை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.