உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர்

அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர்

குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது முடிவானது. ஆனால், படத்தை யார் தயாரிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, அஜித்தின் சம்பளம் 170 கோடியை தாண்டுவதால், அந்த தொகையை கொடுக்க பலரும் தயங்கினார்கள். இந்த சம்பளத்தால்தான் குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு பெரிய இழப்பு. அதை குறைத்தால் படம் தயாரிக்கலாம் என பலரும் சொன்னார்கள்.

குட் பேட் அக்லியை தயாரித்த மைத்ரி நிறுவனமும் இந்த பிரச்னையால் விலகியது. அடுத்து வேல்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் அஜித் படத்தை தயாரிக்கப் போகிறார் என பேச்சு வந்தது. அவரும் பட்ஜெட், சம்பள பிரச்னையால் தயங்க, இப்போது அஜித்தின் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப்போகிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் தமிழக உரிமையை பெற்று நல்ல லாபத்தை சம்பாதித்தவர் ராகுல். தவிர, அஜித்தின் நேர் கொண்ட பார்வை , துணிவு, வலிமை போன்ற படங்களின் வியாபாரம், தயாரிப்பிலும் பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள பிரபல வினியோகஸ்தர். குறிப்பாக, அஜித்தின் தீவிர ரசிகர். அதனால், அடுத்த படத்தை அவர் ரிஸ்க் எடுத்து தயாரிக்கிறார். படத்தை இயக்குபவரும் அஜித் ரசிகர்.

ஆக, அஜித் ரசிகர் இயக்க, அஜித் ரசிகர் தயாரிக்கும் படமாக அஜித் 64 உருவாகி என்கிறார்கள் கோலிவுட்டில். இவர் விஜய்க்கும் நண்பர் , இன்னும் சொல்லப்போனால் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் டீமில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !