கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட்
ADDED : 95 days ago
தெலுங்கில் வரலாற்று பின்னனியில் பிரமாண்டமாக உருவான 'கண்ணப்பா' படம் கடந்தவாரம் பான் இந்தியா படமாக வெளியானது. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கினார். வரலாற்று பின்னனியில் சிவ பக்தர் கண்ணப்பரின் வாழ்க்கையை வைத்து இப்படம் உருவானது.
இதில் கண்ணப்பராக விஷ்ணு மஞ்சு நடித்திருந்தார். பீர்த்தி முகுந்தன் நாயகியாக நடிக்க, மோகன் பாபு, பிரபாஸ், சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்தனர்.
கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் இப்படத்திற்கு ஓரளவு வசூல் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி சாட்லைட் உரிமம் மட்டும் ரூ. 20 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதை தெலுங்கு திரையுலகம் ஆச்சரியமாக பார்க்கிறது.