உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்

அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்

2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து திரைக்கு வந்த படம் ராட்சசன். இதில் அவருடன் அமலாபால், முனீஷ்காந்த், அம்மு அபிராமி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த நிலையில், ராட்சசன் படத்தில் இரண்டாம் பாகம் தொடங்கும் என்று ஏற்கனவே ராம்குமார் கூறிவந்த நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது தனது தம்பி ருத்ரா நடிப்பில் ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தை தயாரித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ராட்சசன் 2 குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அடுத்தபடியாக கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். அதைத் தொடர்ந்து ராட்சசன் 2வில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு அப்படம் தொடங்க உள்ளது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், தற்போது ராம்குமார் இயக்கும் இரண்டு வானம் என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !