உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா?

45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா?


'கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, வாள மீனுக்கும்' பாடல் புகழ் மாளவிகாவுக்கு இப்போது வயது 45. ஒரு தொழிலதிபரை 2007ம் ஆண்டு திருமணம் செய்துவிட்டு, 2 குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார். 'திருட்டு பயலே' படத்திற்கு பின் அவர் நடித்த எந்த படமும் ஹிட்டாகவில்லை. அவரும் திருமணத்துக்கு பின் படங்களில் நடிக்கவில்லை. இப்போது சினிமாவில் ரீ என்ட்ரி ஆக ஆசைப்படுகிறார். சிம்ரன், ஜோதிகா, தேவயானி மாதிரி பல படங்களில் நடிக்க விரும்புகிறார். ஆனால், அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தயங்குகிறார்கள். ஆனாலும் ஒரு முன்னணி ஹீரோவின் படத்தில் மாளவிகா சின்ன கேரக்டரில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இளம் கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக நீச்சல் உடையில் போட்டோசெஷன் எடுத்து அதை வெளியிட்டு இருக்கிறார் மாளவிகா. அந்த போட்டோவை பார்த்தவர்கள் இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா என மிரள்கிறார்கள். அந்த போட்டோசெஷனால் மாளவிகாவுக்கு நல்ல பப்ளிசிட்டி, அது தனக்கு பல படங்களை பெற்றுதரும் என நம்புகிறார். வில்லத்தனமான ரோல்களில் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !