இந்தவாரம் 10 படங்கள் ரிலீஸ் : தேறியது எத்தனை...
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தமிழில் பல புதுப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களில் வசூல் நிலவரம் எப்படி, எது தேறியது என்று விசாரித்தால், ஜூலை 18 வெள்ளிக்கிழமை பன் பட்டர் ஜாம், ஜென்ம நட்சத்திரம், டிரெண்டிங், கெவி, சென்ட்ரல், யாதும் அறியான், ஆக்கிமிப்பு, களம் புதிது, இரவு பறவை மற்றும் பாட்ஷா ரீ ரிலீஸ் என 10 படங்கள் ரிலீஸ். இதில் பன் பட்டர் ஜாம் மட்டுமே ஓகே ரகம். அதற்கும் பெரியளவில் வசூல் இல்லை. இன்று, நாளை பிக்கப் ஆகும் என்று படக்குழு நம்புகிறது. யாதும் அறியான் படம் வித்தியாசமான கதைக்களத்தில் சைக்கோ திரில்லராக வெளியாகி இருந்தது. இந்த படமும் பிக்கப் ஆகலாம்.
கடந்த சில வாரங்களில் வெளியான படங்களில் பறந்து போ, 3 பிஹெச்கே ஓரளவு தப்பித்துள்ளது. மற்ற படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. கடைசியாக அதிக லாபத்தை தந்தது டூரிஸ்ட் பேமிலி மட்டுமே. ஆனாலும், சசிகுமாரின் அடுத்த படமான ப்ரீடம், பைனான்ஸ் பிரச்னை காரணமாக கடந்த வாரம் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தவாரம் விஜய்சேதுபதி நடித்த தலைவன், தலைவி, வடிவேலு, பஹத் பாசில் நடித்த மாரீசன் ஆகிய 2 முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் ஓரளவு நம்பிக்கை தருகின்றன என்கிறார்கள்.