பிளாஷ்பேக்: இயக்குனராக தோல்வி அடைந்த மோகன்
ADDED : 49 days ago
80களில் வெள்ளி விழா நாயகனாக இருந்தவர் மோகன். யாராலும் வெல்ல முடியாத பல சாதனைகளை படைத்தவர். நடிப்பு வாய்ப்பு குறைந்ததும் படம் இயக்க முடிவு செய்த அவர் 1999ம் ஆண்டு 'அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தை இயக்கி, அவரே நடிக்கவும் செய்தார்.
அவருடன் சங்கீதா, பாவனா, மேகா கீதா, ஆனந்த் பாபு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேவா இசை அமைத்தார். இந்த படம் வெளியான அதே நாளில், மின்சார கண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் படங்களும் வெளிவந்தன. இந்த படங்களின் கதையும், மோகன் கதையும் ஒரே மாதிரியாக இருந்தது. அந்த படங்கள் பாடல்களால் வென்றது. இந்த படத்தில் பாடல்கள் சிறப்பாக அமையாததாலும், அனுபவம் இல்லாத மோகனின் இயக்கத்தாலும் பெரும் தோல்வி அடைந்தது.
அதன்பிறகு மோகன் படம் எதுவும் இயக்கவில்லை. அவர் இயக்கிய ஒரே படம் 'அன்புள்ள காதலுக்கு'.