ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்'
ADDED : 50 days ago
செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் சார்பில் மாரியப்பன் முத்தையா தயாரித்துள்ள படம் 'சோழநாட்டான்'. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கி உள்ளார். உதய் கார்த்திக், லுத்துப், சவுந்தரராஜன், நரேன், சீதா, பரணி, விக்னேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவை கையாள, எஸ். பைசல் இசையமைக்கிகிறார்.
படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் கண்ணா கூறும்போது விஜயகாந்த் நடித்த 'உழவன் மகன்' படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது என்றார்.