மேலும் செய்திகள்
செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்'
47 days ago
மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை
47 days ago
27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ
47 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாகிர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூலி'. அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
தற்போது அமெரிக்காவில் ஆகஸ்ட் 13ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவுடன் ஆரம்பமாகி உள்ளது. ரஜினி நடித்து வெளியாகும் படம் என்றாலே அமெரிக்காவில் அமோக வரவேற்பு இருக்கும். இந்தப் படத்தில் மல்டி ஸ்டார் காம்பினேஷன், லோகேஷ் - ரஜினி முதல் முறை கூட்டணி என பல காரணங்களால் அங்கு முன்பதிவிலும், வசூலிலும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ஜெயிலர்' படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்ததே சாதனையாக இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 40 கோடி. அந்த வசூலை 'கூலி' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
47 days ago
47 days ago
47 days ago