மேலும் செய்திகள்
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
45 days ago
செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
45 days ago
இந்திய படங்களுக்கு நிகராக, அதற்கும் கூடுதலாக வசூலை குவித்து வருகிறது ஹாலிவுட் படங்கள். சமீபத்தில் வெளியான எப் 1, ஜூராசிக் வேர்ல்டு ரீ பெர்த், சூப்பர் மேன், படங்கள் வசூலை குவித்தன. இந்த நிலையில் அடுத்து வருகிறது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள , டிஸ்னியின் 'ட்ரான்: ஏரிஸ்' படம் அக்டோபர் 10ம் தேதி இந்தியாவில் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
டிஸ்னியின் ட்ரான் படத்தின் மூன்றாவது பகுதியாக இந்த படம் உருவாகியுள்ளது. 1982ம் ஆண்டு முதல் படமும், 2010ம் ஆண்டு இரண்டாவது படமும் வெளியானது. மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ)உயிரினங்களுக்கும் இடையே ஏற்படும் உறவும், பகையும்தான் இந்த பாகத்தின் கதை.
இந்தப் படத்தை ஜோச்சின் ரோமிங் இயக்கியுள்ளார். இதில் ஜாரெட் லீட்டோ, கிரெட்டா லீ, எவன் பீட்டர்ஸ், ஹசன் மினாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித், ஆர்டூரோ காஸ்ட்ரோ, கேமரன் மோனகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கில்லியன் ஆண்டர்சன் மற்றும் ஜெப் ப்ரிட்ஜஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
45 days ago
45 days ago