உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

முன்னணி இசை அமைப்பாளரான அனிருத் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் வருகிற 26ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 'ஹூக்கும்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கான 'டிக்கெட்' விற்பனையும் நடந்து முடிந்தது. 48 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 'டிக்கெட்' வாங்கியவர்களுக்கு முழு பணமும் 10 நாட்களில் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய இடம், புதிய தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை, என்றும் அதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !