மேலும் செய்திகள்
மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே!
54 days ago
அக். 31க்கு திரைக்கு வரும் ‛ஆண் பாவம் பொல்லாதது'
54 days ago
கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படமான ‛கிங்டம்' படம் ஜூலை 31ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ரிலீஸாகிறது. பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா....
“என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். 'கிங்டம்' ஜூலை 31ல் வெளியாகிறது. ஆரம்பத்திலேயே தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே இந்த படம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம். இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.
இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று. அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். இந்த படத்தின் டீசருக்காக நடிகர் சூர்யா அண்ணா குரல் கொடுத்தார். அவருக்கு என் நன்றி. அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார்.
இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம். விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது'' என்றார்.
54 days ago
54 days ago