உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மானின் வேபேரர் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் 'காந்தா'. இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இதனை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு ஹன்ட் ஆப் வீரப்பன் என்ற வெப் தொடரின் கதையாசிரியர் ஆவார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. ஹிந்தியில் டப் ஆகி ரிலீஸாகிறது.

நேற்று துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். ஒரு பிரபல நடிகர், இயக்குனர் இடையேயான மோதலை தழுவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளனர் என டீசரை பார்க்கையில் புரிகிறது. இந்த டீசருடன் காந்தா திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !