உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்

கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2, தக் லைப் படங்கள் வரவேற்பை பெறவில்லை. கமல் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்க இருந்தது. ஆனால் கமல் ராஜ்யசபா எம்பி.,யாக பதவி ஏற்று, பார்லி கூட்டத் தொடரிலும் பங்கேற்கிறாராம். இதனால் இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்கள் தள்ளிப்போகின்றன.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் முறையாக கமல் படத்திற்கு இவர் ஒளிப்பதிவாளர் ஆக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன் தமிழில் ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட், லியோ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, மலையாள உள்ளிட்ட பிற படங்களிலும் பணியாற்றி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !