மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
62 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
62 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
62 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
62 days ago
மீடூ மூலம் சினிமா பிரபலங்கள் மீது ஏகப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை பலர் தைரியமாக பேசினார்கள். பாதிக்கப்பட்ட விஷயத்தை விரிவாக சொன்னார்கள். அதற்கு சிலர் மன்னிப்பு கேட்டார்கள், பலர் எஸ்கேப் ஆனார்கள். அடுத்து மலையாள திரையுலகில் இப்படிப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரபரப்பாக பேசப்பட்டது. இப்போது தமிழில் மீண்டும் கிளம்பி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி மீது ரம்யா மோகன் என்பவர் எக்ஸ் தளத்தில் வெளிப்படையாக ஒரு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். அதில் கோலிவுட்டில் நடக்கும் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது, கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டார். இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்.
விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தையும், கேரவன் ஓட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் தந்தார் என்ற ரீதியில் அவர் பகீர் குற்றம்சாட்டினார். அந்த டுவிட்டர் பதிவு வைரலானது. பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக அந்த பதிவுகளை நீக்குவதாக ரம்யா கூறினார். ஆனால், அந்த நீக்கப்பட்ட பதிவுகள் ஸ்கிரீன்ஷாட்டாக சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
இந்நிலையில் அந்த குற்றச்சாட்டு குறித்து விஜய் சேதுபதி ஓரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் என்னை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட, இது உண்மை இல்லை என்று தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி தெரியும். என் குடும்பத்தினர்,நண்பர்கள் அப்சேட் ஆனார்கள். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. சில நிமிடம் அந்த குற்றம் சாட்டியவர் மீது ஒளி விழும். அவர் சந்தோஷமாக இருக்கட்டும்'' ''என்றார்.
சைபர் கிரைமில் விஜய் சேதுபதி தரப்பில் அந்த பதிவு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தலைவன் தலைவி படம் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், விஜய்சேதுபதி தொகுப்பாளராக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் நிலையில், இப்படிப்பட்டபாலியல் குற்றச்சாட்டு அவரை பாதிக்குமா என்பது போகப்போக தெரியவரும். அந்த பாலியல் குற்றச்சாட்டு பதிவை வெளிப்படையாக வெளியிட்ட ரம்யா யார்.அவர் சொல்லும் அந்த பாதிக்கப்பட்ட பெண் யார்? உண்மையில் அவர் ட்ரீட்மென்ட்டில் இருக்கிறாரா? இப்படிப்பட்ட பதிவை உடனடியாக நீக்க பிரஷர் கொடுக்க காரணம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய்சேதுபதி தரப்போ இப்போதுதான் தலைவன் தலைவி படம் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத்தில் இன்று ரிலீஸ். இந்த சமயத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ இப்படி கிளப்புகிறார்கள். அவர்களை கண்டறியும் பணி நடக்கிறது என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இப்படி பாலியல் குற்றச்சாட்டுகள் வரும் நிலையில், சம்பந்தப்பட்ட யாரும் சட்டப்படி தண்டிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
62 days ago
62 days ago
62 days ago
62 days ago