முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்'
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'கிங்டம்'. ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியானது.
முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் நேற்று 39 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இரண்டாம் நிலை தெலுங்கு ஹீரோக்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்றவராக விஜய் தேவரகொன்டா இந்தப் படம் மூலம் புதிய சாதனை புரிந்துள்ளாராம். வரும் நாட்களிலும் படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தேவரகொன்டா நடித்து கடந்த வருடம் வெளியான 'பேமிலி ஸ்டார்' படம் தோல்வியடைந்த நிலையில், இந்த 'கிங்டம்' அவருடைய மார்க்கெட்டைக் காப்பாற்றிவிடும் என்கிறார்கள்.