லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம்
தாய் கிழவி படத்தின் வெற்றி விழாவில் ராதிகா பேசியது : உண்மையான வெற்றியை கொண்டாட இந்த மேடையில் நிற்கிறேன். நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டேன். இது உண்மையான வெற்றி 150 ரூபாய் டிக்கெட் விற்று 50 கோடி கலக்ஷென் வந்துள்ளது. சில ஹீரோக்களின் படங்களில் 1000, 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்வதை பார்த்திருக்கிறேன். குறைந்த டிக்கெட் விலையில் இந்த வெற்றி.
என் இத்தனை நாள் கலைப் பயணத்தில் இந்த படத்தின் வெற்றியை பார்த்தது பெரும் பாக்கியம். சித்தி சீரியல் வெற்றிக்குப்பிறகு இந்த படத்தில் தான் பெண்கள் கனெக்ட் ஆனதை பார்க்க முடிகிறது. நேற்று மட்டும் 6 கதைகள் கேட்டேன். எல்லாமே கிழவி கதாபாத்திரமாக கூறுகிறார்கள். ஹீரோயினாக நான் பயணத்தை 48 ஆண்டு அனுபவத்தில் ஒன்றை கற்றுக் கொண்டேன். அனைத்து பெண்களிடம் சினிமா தொழில் குறித்த அச்சம் இருக்கும். அந்த அச்சத்தை என் மனதில் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
இந்த படத்தால் சினிமாத்துறையே குழம்பிப்போய் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் திரையரங்குக்கு போன் செய்து உண்மையாகவே இந்த வசூல் வருகிறதா என கேட்கிறார்கள். படத்தில் கண்டென் மட்டுமே கிங் என்பதை தாய் கிழவி நிரூபித்திருக்கிறது.
சினிமா சமூதாயத்தை கெடுக்கிறதா என்ற கேள்வி இருந்தது. இது பெண்களின் குரலை கேட்கும், அவர்கள் குரலை சொல்லும் படம். அதை உரக்கச் சொல்லும் இளம் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமூதாயம் சீர்கெடாது. இந்த படத்தில் ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆம் இந்த படத்தில் முதன் முறையாக லாபத்தில் கிடைக்கும் பங்கை சம்பளமாக பெற்றுள்ளேன். இப்படி தமிழில் யாரும் பெற்றது இல்லை.
தமிழ் திரையுலகிலேயே லாபத்தில் கிடைக்கும் பங்கில் சம்பளம் பெற்ற ஹீரோயின் நானாக இருப்பேன். பெண்கள் முன்னேற்றம் என கதையில் மட்டும் சொல்லாமல், ஹீரோவுக்கு இணையாக லாபத்தில் பங்கு கொடுத்த பெருமையை தயாரிப்பார்கள் பெற்றுக் கொண்டனர்.
தமிழக முதல்வர், துணை முதல் தாய் கிழவி படத்துக்கு வரிச்சலுகை கொடுக்க வேண்டும். என் வாழ்க்கையில் இரண்டு எஸ் கே முக்கியமானவர்கள். ஒருவர் சரத்குமார், இன்னொருவர் சிவகார்த்திகேயன்.
இவ்வாறு ராதிகா பேசினார்.