உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா

ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா

சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 மற்றும் டாக்ஸிக் படங்களில் நடித்து முடித்திருக்கிறார் நயன்தாரா. இந்த படங்களின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் மன சங்கர வர பிரசாத் காரு படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, அடுத்தபடியாக பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான நயன்தாரா, தற்போது விஜய்யின் வாரிசு படத்தை இயக்கிய வம்சி இயக்கும் ஒரு பான் இந்தியா படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறாராம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !