உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை

பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்பட பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ். அதோடு, தாதா- 87, கைதி, வலிமை, யானை, எதற்கும் துணிந்தவன், அயோத்தி, தேசிங்கு ராஜா- 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படம் கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்தது. சுரேஷ் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியான நேரத்தில் சிலர், புகழ் நடித்தால் அந்த படம் ஓடாது என்று பொய்யான செய்தியை இணையத்தில் பரப்பி வந்ததாக தனது வேதனையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து புகழ் கூறுகையில், இதுவரை நான் காமெடி கலந்த வேடங்களில் நடித்த அதிகமான படங்கள் வெற்றி பெற்றுள்ளன. குக் வித் கோமாளி என்ற ஷோ வெற்றிகரமாக போய்க் கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் போது நான் நடித்தாலே அது ஓடாது என்று எந்த அர்த்தத்தில் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதுபோன்று பரப்பினால் தாங்கள் வெளியில் தெரிவோம். பிரபலமாகிவிடும் என்பதற்காக சிலர் செய்வதாகவே நினைக்கிறேன். இப்படி என்னை இவர்கள் டார்கெட் செய்வதினால் அந்த படங்களில் நடிக்கும் மற்ற கலைஞர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள் என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் புகழ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !