உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு

‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு


‛பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் ஷேன் நிகம். இவரின் 25வது படமாக ‛பல்டி' எனும் படம் உருவாகி வருகிறது. உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படத்தில் கபடி வீரராக ஷேன் நிகம் நடித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் தயாராகிவரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் சாந்தனுவும் ‛குமார்' எனும் கதாபாத்திரத்தில் கபடி வீரராக நடித்துள்ளார். இது தொடர்பான முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோவின் எதிரணி வீரராக நடிப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ‛சோடா பாபு' எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். படம் செப்டம்பரில் ரிலீசாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !