மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
49 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
49 days ago
தனுசுடன் கிசுகிசுவில் அடிபடுகிறார் மிருணாள் தாக்கூர், அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க அழைக்கப்படுகிறார். பல முன்னணி தமிழ் ஹீரோக்கள் அவருடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கயாடு லோஹர் மீதிருந்த கிரேஸ் இப்போது மிருணாள் தாகூர் மீது கிளம்பியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஒரு நேரடி தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை என்கிறார்கள் கோலிவுட்டில்.
யார் இந்த மிருணாள் தாகூர் என்றால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓரளவு பரீட்சயம். துல்கர் சல்மான் நடித்த ‛சீதா ராமம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்தார். தமிழில் அந்த படம் டப்பாகி, பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக, அந்த படத்தின் பாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன. அந்தவகையில் தமிழ் மக்கள் இதயங்களில் மிருணாளும் இருக்கிறார்.
மஹாராஷ்டிராவை சேர்ந்த மிருணாள் முதலில் மராத்தி படங்களில் நடித்தார். பின்னர், டிவி, தெலுங்கு, ஹிந்தி என முன்னேறினார். சீதாராமம் படத்தில் ஹோம்லியாக நடித்தவர், பிற்காலத்தில் கவர்ச்சிக்கு மாறினார். ஹிந்தியில் கவர்ச்சியான நடிப்பு, கவர்ச்சி காஸ்ட்யூம்களால் பிரபலம் ஆனார். இப்போது இந்தியளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரை எப்படியாவது தமிழுக்கு அழைத்து வர வேண்டும் என பலர் நினைக்கிறார்கள்.
33 வயதான மிருணாளும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். வெங்கட்பிரபு இயக்க சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பாரா, தனுஷின் அடுத்த படத்தில் இருப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
49 days ago
49 days ago