ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள்
ADDED : 406 days ago
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அரசியலுக்கு செல்வதால் இதுதான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இவர்கள் மூவரும் இந்த படத்தில் இடம் பெறும் ஒரு முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பு காட்சியில் விஜய்யிடம் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.