உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத்

என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத்

மதராஸி பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது : நானும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக வளர்ந்தோம். அவரும் நானும் 3 படத்தில் இணைந்தோம். அடுத்து எதிர்நீச்சல். அப்பவே அவருக்கு நல்ல பாடல்கள் அமைந்தது. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எஸ் கே. நாங்க இணையும் 8வது படம் மதராஸி. அதேபோல் என்னுடைய 21வயதிலேயே படம் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடன் இது 3வது படம். இந்த பட பாடல்கள் நன்றாக வந்துள்ளது. இதில் கப்பும் இருக்கிறது. பயரும் இருக்கிறது

அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரிதான் இசையமைக்கிறேன். ஒரே மாதிரி உழைப்புதான். இந்த படத்துல வேறமாதிரி நடிச்சு இருக்கிறார் சிவகார்த்திகேயன். நான் ஒரு நாள் பீல்ட் அவுட் ஆகும்போது சிவகார்த்திகேயன் உழைப்பு, வெற்றி, எங்கள் கூட்டணியை நினைச்சு பெருமைப்படுவேன். சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான எதிர்நீச்சல் எனக்கு முதல் பெரிய வெற்றி. அவர் எனக்கு செல்லம். 50 கோடி, 100 கோடி வசூல் தொடங்கி இப்ப 300 கோடிக்கு வந்திட்டாரு.

ஜன நாயகன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஜனவரியில் படம் ரிலீஸ், பாடல்கள் நன்றாக வந்துள்ளது. இது கடைசி படம் என விஜய்சார் சொல்வதால் அவரை மிஸ் பண்ணுவேன். எனக்கு இசை மீது மட்டுமே ஆர்வம், நடிப்பில் அல்ல.

இவ்வாறு அனிருத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

JSD
2025-08-26 01:17:25

Don't trust whatever VJ said. He's lying a lot. He will back to cinema after the election. He's being useless for TN now.