ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார்
ADDED : 48 days ago
ரஜினி நடிப்பில் முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார். அதேப்போல் கமல் நடிப்பில் தெனாலி, அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாக படங்களில் நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் அவர் இயக்கிய படையப்பா படம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் ரீரிலீஸ் ஆக உள்ளது. இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள ரவிக்குமார், என்னிடத்தில் இப்போதும் பல சிறப்பான கதைகள் உள்ளன. குறிப்பாக ரஜினி, கமலை இணைத்து படம் இயக்குவதற்கும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.