த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
ADDED : 421 days ago
தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன் - அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
சமீபத்தில் த்ரிவிக்ரம், நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து படம் இயக்குகிறார். இது வெங்கடேஷின் 77வது படமாக உருவாகிறது. இதனை ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பளம் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.