நடிகர் விஜய் மனைவி போட்டோ பல மாதங்களுக்குபின் நெட்டில் வைரல் ஆகி உள்ளது. ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் விஜய் மகன் ஜேசனும் இருக்கிறார். ஆனால், மகள் திவ்யா மிஸ்சிங். இன்றைய சோஷியல்மீடியா காலத்தில் விஜய் மகள் எப்படி இருப்பார், எங்கே படிக்கிறார் என்ற தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அவர் பிரைவசிக்கு பிரச்னை வரும் என்பதால் மகள் போட்டோ, வீடியோ வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். அதனால்தான், வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் பள்ளி படிப்பை முடித்த திவ்யா, 'தெறி' படத்தில் சின்ன ரோலில் நடித்தார். பின்னர், விஜய் மகள் கனடாவில் மேற்படிப்பு படித்து வருகிறார். மகளுடன் சங்கீதா இருக்கிறார். அவர்கள் கனடா சென்றபோது அந்த போட்டோ சென்னை ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அம்மா, சகோதரியை வழியனுப்பி வைக்க, சஞ்சய் சென்றுள்ளார் என்கிறார்கள் விஜய் தரப்பினர். இன்னொரு தரப்பு விஜய் மகள் அமெரிக்காவில் படிப்பதாகவும் கூறுகிறது. இன்று விஜய் மகள் 20வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். செப்டம்பர் 9, 2005ல் பிறந்தவர் திவ்யா.