மேலும் செய்திகள்
மஞ்சு வாரியர் பட இயக்குனர் மும்பை விமான நிலையத்தில் கைது
7 minutes ago
தனுஷ் முதுகில் குத்த விரும்பாத ஜி.வி.பிரகாஷ்
7 minutes ago
24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்!
7 minutes ago
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் 'பேட்ட, மாஸ்டர்' என ரஜினி, விஜய் படங்களில் நடித்ததை தொடர்ந்து பிரபலமான நடிகையாக மாறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரமுடன் இணைந்து 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது துல்கர் சல்மான் ஜோடியாக 'பட்டம் போலே' என்கிற திரைப்படத்தில் தான்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் என்பவரின் மகளாக இருந்தாலும் இந்த முதல் படத்திற்காக ஆடிஷன் செய்துதான் அவர் தேர்வு செய்யப்பட்டார். அப்படி அவரை உதவி ஆடிஷன் செய்தது நடிகர் மம்முட்டி தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
இது குறித்து மம்முட்டி ஆடிஷன் செய்வது போன்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு மாளவிகா மோகனன் கூறும்போது, “என்னுடைய முதல் ஆடிசன் இதுதான். யாருக்காவது இப்படி ஒரு ஜாம்பவான் நடிகர் தனது ஆடிசனுக்கான புகைப்படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமா ? ஆனால் எனக்கு நடந்தது. பட்டம் போலே படத்திற்கு கதாநாயகி வேண்டும் என தேடிய போது என்னை ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து மம்முட்டி தான் புகைப்படம் எடுத்தார். அவர்தான் அந்த படத்தில் என்னை நடிப்பதற்கு ஓகே சொன்னார்” என்று கூறியுள்ளார்.
7 minutes ago
7 minutes ago
7 minutes ago