‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார்
ADDED : 247 days ago
மலையாள சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. 'ஹேப்பி வெட்டிங்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் புகழ் பெற்றார். அப்பன், நுனக்குழி, சாட்டர்டே நைட், தமாஷா, ஹலால் லவ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தில் நடித்தார். இப்போது மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் திருமணம் செய்துள்ளார். மணமகன் இசை அமைப்பாளர் அபி டாம் சிரியாக். கடந்த 9 ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். நேற்று இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்த தகவலை கிரேஸ் ஆண்டனி தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.