உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒளிப்பதிவாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ஒளிப்பதிவாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு


தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவார்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2026 - 2029ம் ஆண்டுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இதில் தலைவராக எஸ்.சரவணனும், பொதுச்செயலாளராக ஏ.ரமேஷ்குமாரும், பொருளாளராக எம்.வெற்றிவேலும், துணை தலைவர்களாக ஆர்.திவாகரனும், பி.லோகநாதனும், இணை செயலாளர்களாக ஆர்.வேல்ராஜ், சேவியிலோ ராஜா, லக்ஷ்மன் குமார் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் தேர்தலை நடத்தினார்.

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. தமிழக அமைச்சர் ராஜ்மோகன் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கினார். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !