உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் ஜோஜூ ஜார்ஜ்

100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் ஜோஜூ ஜார்ஜ்


'பனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படம் 'பரிபாடி'. மாலிகாபுரம்', '2018', 'ரேகாசித்திரம்', 'ஆடு 3' போன்ற படங்களை தயாரித்த காவ்யா பிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜ் கதாநாயகனாக நடிப்பதோடு, சுமார் 100 புதிய முகங்களை முக்கியமான கதாபாத்திரங்களில் அறிமுகப்படுத்துகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ராஜீவ் ரபி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் இசை அமைக்கும் முதல் மலையாளப்படம் இது.

திரிச்சூரை பின்னணியாக கொண்டு, முக்கியமாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் சுமார் நான்கு மாத காலம் சிறப்பு பயிற்சிக்கு பிறகே கேமராவுக்கு முன்பு களமிறங்கினர். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !