அஜித்தின் 'டேர் டெவில்' பூஜையுடன் துவங்கியது: உன்னி முகுந்தனும் படத்தில் இணைந்தார்
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 'டேர் டெவில்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அஜித் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையே சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பதாகவும், நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவித்தார். மற்ற நடிகர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை.
இந்த நிலையில், சென்னையில் இன்று (நவ.,2) 'டேர் டெவில்' படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் அஜித் பங்கேற்கவில்லை. ஷாலினி, ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்ரீலீலா, அனிருத், பார்த்திபன், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூடவே, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் பூஜையில் கலந்துகொண்டுள்ளனர். இதனால், இவர்களும் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. உன்னி முகுந்தன் வில்லனாக நடிப்பாரா அல்லது 2வது ஹீரோவா என்பது இனிதான் தெரியும். ஷாலினி கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கிவைத்தார்.