மேலும் செய்திகள்
நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
4 days ago
தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2
4 days ago
கடந்த 2012ம் ஆண்டில் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விக்ரம் பிரபுவுக்கு நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன். முதல் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரே இரண்டாம் பாகத்துக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அதோடு முதல் பக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் மதியழகன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தின் புதிய போஸ்டரை தற்போது படக் குழு வெளியிட்டுள்ளது.
4 days ago
4 days ago